யாழ்ப்பாணத்தில் பற்றைக்காட்டிற்குள் சிக்கிய பொதிகள்; அதிரடிப்படையினர் அதிரடி
யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சா பொதிகள் பற்றைக்காட்டிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் பகுதியில் கஞ்சா போதைப்பொருட்கள் அதிரடி படையினர் மீட்கப்பட்டுள்ளது.
நாகர் கோவில் பகுதியில் கஞ்சா போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த இடத்திற்கு விரைந்த அதிரடி படையினர் போதைப்பொருட்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் ஒவ்வொரும் சிறு சிறு பொதிகளாக பொதியிட்டப்பட்டிருந்ததாகவும் , அவ்வாறு பொதியிடப்பட்ட பொதிகளை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் , மீட்கப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.