நாட்டிற்காக சேவையாற்றியவர்களை நினைவுகூர்ந்த கனடா முக்கியஸ்தர்கள்!
நாட்டிற்கு சேவை செய்த மற்றும் தொடர்ந்து சேவை செய்தவர்களை நினைவுகூரவும், கெளரவிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) உட்பட பல முக்கியஸ்தர்கள் ரொறன்ரோவில் ஒன்று கூடினர்.
இதேவேளை கனடாவின் சுதந்திரம், மற்றும் அமைதியைப் பாதுகாப்பதற்கான மதிப்புகளை நிலைநிறுத்துவதற்காக எமது நாட்டின் படைவீரர்கள் திறமைமிக்க சேவை பெண்கள் இறுதி தியாகத்தை செலுத்தியுள்ளனர்.

மேலும் சீருடை அணிந்த ஆண்கள் பெண்கள் செய்த தியாகம், கவனிக்கப்படாமல் இல்லை. அவர்களின் துணிச்சலையும், தன்னலமற்ற தன்மையையும் மரியாதை செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றி செலுத்துவதாக கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் அவர்களின் மரபுகள் என்றென்றும் வாழ்வதை உறுதி செய்யும் வகையில் இன்றும், ஒவ்வொரு நாளும் நாம் அவர்களை நினைவு கூர்வோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

