தமிழர் பகுதியொன்றில் கனடாவிலிருந்து வந்தவருக்கு வாடகை வாகனத்துக்குள் நடந்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்
வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர் நேற்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்த, கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உடல்நலக்குறைவு
வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.