கனடாவிலிருந்து இலங்கை சென்ற நபரொருவருக்கு நேர்ந்த நிலை!
கனடாவில் இருந்து இலங்கைக்கு சென்ற நபரொருவர் நீராடச் சென்ற போது காணாமல் போயுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 19 வயது கனேடிய பிரஜை ஒருவரே காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹிக்கடுவ கடற்கரையில் நேற்றையதினம் (17-01-2025) மாலை நீராடச் சென்ற ஒருவரே நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் நடாத்திய விசாரணையில், வெளிநாட்டவர் நீச்சலுக்கு சென்ற இடத்தில் இருந்த எச்சரிக்கை பலகைகளை கவனிக்காமல் கடலில் நீந்திச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
காணாமல் போன நபரைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படை படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.