பால் குடித்ததும் வாழைப்பழம் சாப்பிடலாமா?
பாலில் நிறைய கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளதுபோல் வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் மற்றும் புரத சத்துக்கள் உள்ளது .
எனினும் இவை இரண்டையும் ஒன்றாய் உண்பது சிலருக்கு சில பாதிப்புகளை உண்டாக்கும்.
என்ன பாதிப்பு ஏற்படும்
1.சிலர் பால் குடித்த பிறகு வாழைப்பழம் சாப்பிட ஆசைப்படுவதுண்டு .
இதனால் சில பக்க விளைவுகள் உண்டாகும் . இந்த பக்கவிளைவுகளைத் தவிர்க்க, இரண்டிற்கும் இடையே குறைந்தது அரை மணி நேரம் இடைவெளி விட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
2.மேலும் சிலருக்கு ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா இருக்கும் .இப்படி உள்ளவர்கள் பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிட்டால் ஆபத்து .
3.இப்படி இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது ,சளி மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.
4.பழங்கால நம் இந்திய மருத்துவத்தில் பால் மற்றும் வாழைப்பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர் .
5.ஆயுர்வேதத்தில் உள்ள ஒவ்வொரு உணவும் சுவை மற்றும் செரிமானத்திற்குப் பிந்தைய விளைவுகள் உண்டு அவை நம் உடலில் சூடு மற்றும் குளிர்ச்சி சக்திகளைக் கொண்டுள்ளது.
6.அதனால் வாழைப்பழத்தையும் பாலையும் சேர்த்து சாப்பிட்டால் சிலருக்கு இரைப்பை பிரச்சனை வந்து பாடாய் படுத்தும் .
7.பால் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாய் உண்பது வயிற்றில் வாயு பிரச்சனை மற்றும் சைனஸ் பிரச்னையை உண்டாக்கும் ,
8.மேலும் இரண்டையும் ஒன்றாய் உன்பது சளி, இருமல், உடலில் சொறி, வாந்தி, பேதி போன்ற பிரச்னைகள் ஏற்படுத்துகின்றன.