இரவில் சாதம் உட்கொள்ளலாமா?
நாளைக்கு ஒருமுறையாவது சாதத்தை சாப்பிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் பசி அடங்காது. அப்படிப்பட்ட சாதத்தை பெரும்பாலும் மதிய வேளையில் தான் சமைத்து சாப்பிடுவோம்.
ஒருவேளை மதியம் சமைத்த சாதம் மீந்து போனால் அதை இரவு நேரத்தை வைத்து சாப்பிடுவோம். ஆனால் இரவு நேரத்தில் சாதம் சாப்பிடக்கூடாது என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
சாதத்தில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன மற்றும் இவை எளிதில் உடைந்து ஜீரணமாகிவிடும்.
அதனால் சாதம் மிகவும் நல்லது என்று நினைத்துவிட வேண்டாம். சாதமானது எளிதில் உடைந்துவிடுவதால் இது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும்.
அதனால் தான் சாதத்தை உண்ட பின் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது.
கார்போஹைட்ரேட்டுகள்
அதே சமயம் சாதத்தில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவில் கலோரிகள் அதிகளவில் உள்ளன.
இந்த கார்போஹைட்ரேட்டுகள் உடலால் சரியாக பயன்படுத்தப்படாமல் இருந்தால் அது உடலில் கொழுப்புக்களாக தேங்கி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
இப்படிப்பட்ட சாதத்தை பகல் வேளையில் உட்கொண்டால் உடல் செயல்பாடுகளால் கொழுப்புக்களாக தேங்காமல் இருக்கும்.
அதையே இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
அதுவும் இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிடும் போது அது எளிதில் ஜீரணிக்கப்பட்டு உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.
அதன் பின் சில மணிநேரங்களில் மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்து பசியுடனேயே இருப்பதால் இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும்.
சாதம் எளிதில் ஜீரணமாவதால் பயர் சாதம் ஒரு சிறந்த இரவு நேர உணவாக நினைக்கிறார்கள்.
ஆனால் இரவு நேரத்தில் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது தான் நல்லது.
சப்பாத்தி உட்கொள்ளல்
எனவே இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிடுவதற்கு பதிலாக சப்பாத்தியை சாப்பிடுங்கள்.
இதனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைப்பதுடன் பிற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
அதுவும் முழு கோதுமை மாவால் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டால், அது ஜீரணமாக நேரமாகும்.
இதனால் இரவு முழுவதும் பசியும் எடுக்காது, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
சப்பாத்தி ஆகாதவர்கள்
அத்தகையவர்கள் சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு பதிலாக, சாலட் மற்றும் சூப்புகளை உட்கொள்ளலாம்.
ஆனால் உணவுகளை சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் சாதத்தை விட சப்பாத்தியை சாப்பிடுங்கள்.
முக்கியமாக சாதத்தில் கைக்குத்தல் அரிசி சாதத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாம்.
ஏனெனில் இந்த சாதம் ஜீரணமாக நேரம் எடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவும் சட்டென அதிகரிக்காது.