இலங்கையர்கள் வரியில்லாமல் ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்யலாமா?
இலங்கை அரசாங்கம் அண்மையில் நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்கி இருந்தது.
எனினும், குறித்த வர்த்தமானிக்கு அமைய பொதுமக்கள் வாங்குவதற்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், ஜப்பானில் இருந்து, மூன்று வருடங்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
அதன்படி ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி இல்லாத விலைவருமாறு,
Toyota Corolla Cross 55 தொடக்கம் 60 இலட்சம்
Honda Vezel – 60 தொடக்கம் 65 இலட்சம்
Toyota Yaris 27 தொடக்கம் 30 இலட்சம்
Toyota Yaris Cross 55 Suzuki Wagon R 35 என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.