கெட்ட கொலஸ்ட்ராலை உடலிலிருந்து நீக்கனுமா? இந்த 5 உணவுகள் போதும்!
பொதுவாக நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற நம் வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதே ஆகும்.
அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்தாவிட்டால் இதயநோய், மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் 5 உணவுகள்,
ஆப்பிள்,
ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிளை சாப்பிடுவதால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது. கூடுதலாக, இது எடை குறைக்க உதவுகிறது.
கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், பச்சை பீன்ஸ்,
கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், பச்சை பீன்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
ஆரஞ்சு ,
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை சரிசெய்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
ப்ளாக் டீ
ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ இரத்தம் உறைதல் பிரச்சனையிலிருந்தும் விடுபடுகிறது.
பூண்டு,
கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு உதவுகிறது. பூண்டில் மூலிகைச் சத்துக்கள் இருப்பதால், கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.