பேரிச்சம் பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
பேரிச்சம் பழங்களில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருப்பதாலும், அதன் கிளைசீமிக் இன்டக்ஸ் குறைவாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பழங்களை சாப்பிடலாம் என பரிந்துரைக்கப்படுகின்றது.
பேரிச்சம் பழங்களில் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் உள்ளது.
எனவே நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம் பழங்களை அதிகமான அளவு உட்கொள்ளக் கூடாது.
எவ்வளவு உண்ணலாம்?
முறையான உணவுப்பழக்கத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு பேரிட்சைகளை சாப்பிடலாம். இதிலிருக்கும் அதிக நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு கண்டிப்பாக தேவை.
100 கிராம் பேரிச்சம் பழத்தில் கிட்டத்தட்ட 314 கலோரிகள் இருக்கிறது. இது மிக அதிகம்.
அதோடு வைட்டமின் ஏ, கே, பி, மக்னீசியம், இரும்பு, தாமிரம், பொட்டாசியம், மாங்கனிசு போன்றவை உள்ளது.
இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பழங்களை சாப்பிடலாம்.