இலங்கையை மீட்டெடுக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பலத்தை நிரூபிக்கும் தளமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தொிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் தெற்கு தளம், 13 ஏக்கர்களை கொண்டு சேவைகள் நிலையம் மற்றும் போட்டிசிட்டி ஆகியன அதிமுக்கிய இடங்கள் சீனாவின் பிடிக்குள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் 32 வது காா்த்திகை வீரா்கள் தின நிகழ்வில் உரையாற்றிய அவா், இன்று வீசா இல்லாத பயணியைப் போன்ற சீனக் கப்பல், இலங்கையில் இருந்து செல்லாமல், இலங்கையின் கடற்பகுதியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அரசாங்கத்தின் அமைச்சரவை, அமைச்சர்கள் வெளியில் வந்து அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இதனைக் கருத்திற்கொள்ளாமல், அரசாங்கம் குடும்ப அதிகாரத்தைக்கொண்டு செயற்படுவதாக அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இன்று நாட்டில் இருப்பது ஜனநாயக்க நிா்வாகம் அல்ல. குடும்ப நிர்வாகமாகும். எனவே இன்று சிறந்த ஒரு நிா்வாகத்தை அமைக்கவேண்டிய அவசியம் உள்ளது.
சிலர் இந்தப்பிரச்சனைக்கு நாடுகளை மாற்றினால் தீா்வுக்கிடைக்கும் என்று நம்புகின்றனா். எனினும் அது உாிய தீா்வு இல்லை என்று அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தொிவித்துள்ளார்.