சென்னையில் கலக்கப்போகும் கனடா வாழ் புலம் பெயர் தமிழ் மாணவர்கள்!
இந்தியாவில் இடம்பெறும் எடிசன்' திரை விருது விழா மேடையில் கனடா வாழ் புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களின் நடனம் இடம்பெறவுள்ளது.
உலகத் தமிழர்களின் இணைய வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் திரைக் கலைஞர்கள் விருது பெறும் நிகழ்வில் கனடா வாழ் தமிழ் மாணவர்கள் நடனம் ஆட உள்ளனர்.
எடிசன் திரை விருது மேடை
மார்ச் 24ஆம் திகதி தமிழகத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள 16 ஆம் ஆண்டு எடிசன் திரை விருது நடைபெற உள்ளது.
அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் திரை கலைஞர்கள் தன்னார்வ இசையமைப்பாளர்கள், நடன மணிகள், பின்னணிப் பாடகர்கள் ஆகியோர் தமிழ்நாட்டில் உள்ள திரை கலைஞர்களுடன் இணைந்து கலை நிகழ்வு நடத்த உள்ளனர்.
அதில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு எடிசன் திரைபிரதி- தன்னார்வ இசையமைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்திய கனடாவைச் சேர்ந்த ராம் அகராதி, தமிழகத்தில் உள்ள முன்னணி நடன கலைஞர்களுடன் இணைந்து கனடாவில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவித்து அவர்களை இவ்வாண்டு நடைபெறும் எடிசன் திரைவிருதுகள் விழாவில் நடனமாட உள்ளனர்.
இதன் மூலம் கனடா தமிழ் மாணவர்களுக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகளை பெறவும், தங்களின் திறமைகளை பல்வேறு நாட்டு தொலைக்காட்சிகளில் மூலம் தமிழர்கள் அறியவும் எடிசன் திரை விருது மேடை அவர்களுக்கு உதவியாக இருக்கும் என எடிஷன் திரை விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
அதேவேளை இவ்வாண்டு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், கனடா நாட்டு கலைஞர்கள் பங்கேற்று கலை விருந்து படைக்க உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது