நேற்றிரவு இடம்பெற்ற கலவரம்; விளக்கமளிக்கவுள்ள அமைச்சரவை அமைச்சர்கள்
நுகேகொடை - மஹரகம வீதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின் அம்புல்தெனிய சந்தி மூடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியின் தற்போதைய நிலை தொடர்பிலும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதேவேளை, நேற்றிரவு நடந்த மோதல்கள் தீவிரவாதக் குழுவின் விளைவாகும் என்றும் பொலிஸ் துறை கூறுகிறது.
மேலும் இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள் இரவு 11 மணிக்கு ஊடகங்களைச் சந்தித்து விளக்கமளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு என்ன? நடந்தது என்பது தொடர்பில், “உண்மை” என்ற பதாகையின் கீழ், அரசாங்க தரபின்னர் விளக்கமளிக்கவுள்ளனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
