அன்னையர் தினத்தில் முதலமைச்சராக பதவிறே்ற மகன் ; நெகிழ்ச்சியில் முதல்வர் விஜயின் தாயார் கூறிய விடயம்
தமிழ்நாட்டு முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பாக சென்று தலைமைக் காரியாலத்துக்கு சென்றுள்ளார்.

C.ஜோசப் விஜய் எனும் நான்... என விஜய் கூறும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பதவி பிரமாணம் செய்துகொண்டார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த விஜயின் பெற்றோர் ஆனந்த கண்ணீரில் விட்டனர்.
அன்னையர் தினத்தில் மகன் முதலமைச்சராக பதவியேற்றது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தான் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அவரது தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.