கொழும்பில் வர்த்தகர் மீது துப்பாக்கிச்சூடு.... தப்பியோடிய சந்தேக நபர்!
கொழும்பில் உள்ள ஹோமாகம, கலவிலவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (15-11-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹோமாகம, கலவிலவத்த பகுதிக்குச் சென்ற மர்ம நபரொருவர் குறித்த வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பியோடியுள்ளதகா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு முன்விரோதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.