தமிழர் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர் ; நள்ளிரவில் பயங்கரம்
திருகோணமலை - சீனக்குடா, ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இனம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலையின் பின்னணி
சம்பவ இடத்திற்கு விரைந்த சீனக்குடா பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதற்றம் நிலவியதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. இக்கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
அத்துடன், மரணத்துக்கான காரணம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.