இலங்கை பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; மீறுவோருக்கு காத்திருக்கும் சிக்கல்
திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் பயணிகள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டணப் பட்டியல்
பேருந்துகளினுள் கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரசபை எச்சரித்துள்ளது.
இது தொடர்பான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் முறைகேடுகள் குறித்து பின்வரும் இலக்கங்களுக்கு முறைப்பாடு அளிக்கலாம்.
தொலைபேசி: 0112860860
வட்ஸ்எப் : 0702860860