பஸ்கள் ஓடாது; தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அதிரடி!
நாட்டில் வரும் திங்கட்கிழமை முதல் தனியார் பஸ் வண்டிகள் ஓடாது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் இல்லாத காரணத்தால் பஸ் போக்குவரத்தை முறையாக மேற்கொள்ள முடியாது ள்ளதாக சுட்டிக்காட்டிய அச்சங்கத்தினர், டீசல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லையேல் திங்கட்கிழமை 4 ஆம் திகதி முதல் தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பஸ் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி இதுதொடர்பாக அரசுக்கு அறிவிக்க வுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.
தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் டீசல் வழங்கப்படும் என தெரிவிகுகப்பட்ட போதும் தனியார் பஸ்களுக்கு அங்கு டீசல் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.