பஸ் கட்டணமும் அதிகரிப்பு?
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது இந்த யோசனையை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் அடுத்த வாரம் அனுப்பவுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 20 ரூபாய் காணப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இதுவரை இல்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விடுத்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அதேவேளை, தமது பேருந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரமற்றவையென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.