ரயில் பாதையில் பாதுகாப்பற்ற முறையில் செலுத்தப்பட்ட பேருந்து
கொழும்பு – குருநாகல் மார்க்கத்தில் அலவ்வ பிரதேசத்தின் ரயில் பாதையின் குறுக்கே பேருந்து ஒன்று பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) காலை 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த பேருந்து ரயிலால் மோதப்படும் விபத்திலிருந்து தப்பியதாகவும் பொல்கஹவெல போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் கடவையின் ஊடாக பேருந்தை கவனக்குறைவாக செலுத்தி கொலைகளுக்கு முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே பெருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கல்னேவவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த பேருந்து 40 பேர் பயணித்துள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.