கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற ஸ்ரீமதி; மயான குழியில் உடலோடு கல் உப்பு புத்தகங்கள் புதைப்பு
தமிழகத்தை உலுக்கிய மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் ,மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மயான குழியில் கல் உப்பு தூவப்பட்டு மாணவி ஸ்ரீமதியின் உடலோடு புத்தகங்கள் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கனியாமூர் தனியார் மேல்நிலைபள்ளியில் மாணவி கடந்த ஜூலை 12ம் திகதி பலியானார்.
இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் அங்கு கலவரங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் பலியான மாணவியின் உடல் இன்று அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்த நிலையில்,நீதிமன்ற உத்தரவை அடுத்து உடல் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மாணவியின் உடலை முதலில் எரிப்பதாகத்தான் முடிவு செய்யப்பட்டிருந்தது.
பின்னர்தான் புதைக்க முடிவு செய்தனர் .
மாணவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் எப்படி வர போகிறது என தெரியவில்லை என தெரிவித்த உறவினர்கள், ஒருவேளை ரிப்போர்ட் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய கோரிக்கை வைப்போம். இதற்காக உடலை புதைக்க முடிவு செய்ததாக கூறியுள்ளனர்.