கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டில் திருட்டு
கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மூடப்பட்ட வீட்டிற்குள் சிலர் நுழைந்து அங்கிருந்த அறையொன்றில் இருந்து இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் வெளிநாட்டு மதுபான போத்தல்களையும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவரும் வாதுவை சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரும் என தெரிய வந்துள்ளது.
102 பவுண் தங்க நகைகள், பெறுமதியான கைக்கடிகாரம் மற்றும் 300 அமெரிக்க டொலர்கள், 40 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் என்பனவும் திருடப்பட்டுள்ளதாக குறித்த கோடீஸ்வரர் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
நுகேகொடை, தலபாபிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் வர்த்தகர் வசிப்பதாகவும் பன்னிபிட்டிய வீடு சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.