மருத்துவர் அருச்சுனாவுக்கு அதிகாரத்துவப்படிப்பினை; மக்கள் மௌனமானதன் பின்னனி என்ன?
அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் இலங்கையையும் தாண்டி புலம்பெயர் தமிழர் மத்தியிலும் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது.
காரணம் யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் முறைகேடுகளை மருத்துவ அத்தியட்சகர் அருச்சுனா இராமநாதன் அம்பலப்படுத்தியதே ஆகும்.
அதுமட்டுமல்லாது வடமாகாண சுகாதார துறையில் இடம்பெற்ற ஊழல்களையும் அவர் அம்பலப்படுத்தியதால் தமிழ் மக்களின் ஆதரவு மருத்துவர் அருச்சுனாவுக்கு குவிந்தது.
உண்மைகள் கசக்கும்
மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக புறப்பட்ட மக்கள் படையின் உரத்த குரல் சாவகச்சேரி போராட்டதின் மூலம் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது.
எனினும் தற்போது மருத்துவர் அர்ச்சுனாவின் குரல் எதிரொலிக்கின்றபோதும் , அவரது போராட்டத்திற்கு ஆதரவளித்த மக்களின் குரல் அமைதியாகியுள்ளதை அவதானிக்கமுடிகிறது.
இதற்கு காரணம் யார்?
யாழ்ப்பாண மக்கள் மருத்துவ வசதிகளின்றி அல்லபடுவதை விரும்பும் அந்த நபர்களுக்கு அரசியல் பின்புலம் நன்றாக பக்கபலமாக உள்ளதாக சமூகவலைத்தள பதிவுகளின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
ஆட்சி பீடத்தில் இருப்பவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இன்று மக்களுக்காக குரல் எழுப்பிய மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உண்மைகள் கசக்கும் என்பதை விட பொய்கள் கேலிக்கூத்தாடிக்கொண்டிருக்கின்றது என்பதே தற்போதைய நிஜம் என்பதையே சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம் எடுத்துகாட்டுகின்றது என கூறினால் அதில் தவறில்லை.