பயணப்பையில் கட்டுகட்டாக பெருந்தொகை பணம் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

Puttalam Sri Lanka Police Investigation Crime Drugs
By Viro May 24, 2025 10:36 AM GMT
Viro

Viro

Report

டுபாயிலிருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபா மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கடல் வழியாக போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த குழுவுக்கு இந்த பணம் வழங்கப்படவிருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணப்பையில் கட்டுகட்டாக பெருந்தொகை பணம் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் | Bundles Of Cash In Travel Bag Probe Reveals Shock

பெருந்தொகையான பணம் 

மாரவில, தொடுவாவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நேற்று (23) இரவு மஹவெவ, சிவிராஜ மாவத்தையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை சோதனை செய்தனர்.

அப்போது, முச்சக்கர வண்டியில் இருந்த கறுப்பு நிற பயணப் பையை பரிசோதித்தபோது, அதில் பெருந்தொகையான பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள், முச்சக்கர வண்டியில் இருந்த இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர் துமிந்தவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்தவுக்கு விளக்கமறியல்

சந்தேக நபர்களிடம் விசாரணை செய்தபோது, கடந்த 19ஆம் திகதி பேருவலை அருகே கடலில், சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருள் தொகை பலநாள் மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது.

அந்த படகில் இருந்த கேப்டன் உட்பட 6 பேருக்கு தலா 30 இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு போதைப்பொருளை கொண்டு வருவதற்கு முன்னர், கடத்தல்காரர்கள் பலநாள் மீன்பிடி படகிற்கு 70 இலட்சம் ரூபா வழங்கியிருந்தனர்.

முச்சக்கர வண்டியில் பணத்தை கொண்டு வந்த நபரும் பலநாள் மீன்பிடி படகு ஒன்றின் உரிமையாளராவார். முன்னதாக, 100 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் அந்த படகு கைப்பற்றப்பட்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

இலஞ்ச பணத்தை பங்கிடும் அரச நிறுவனங்கள் ; வெளியான அதிர்ச்சி தகவல்

இலஞ்ச பணத்தை பங்கிடும் அரச நிறுவனங்கள் ; வெளியான அதிர்ச்சி தகவல்

புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்பார்வையின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சகர்  வழிகாட்டலின் பேரில், பலநாள் மீன்பிடி படகின் கேப்டன் மற்றும் இரு பெண்கள் உட்பட மேலும் 6 சந்தேக நபர்களை, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டிக்கு பாதுகாப்பு வழங்கிய மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளனர்.

டுபாயில் இருந்து இயக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த நபர்கள், சிலாபம், தொடுவாவை, நீர்க்கொழும்பு, மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இதுவரை தெரியவந்துள்ளது.

யாழ் பாடசாலை விடுதியிலிருந்து 3 மாணவிகள் எஸ்கேப்

யாழ் பாடசாலை விடுதியிலிருந்து 3 மாணவிகள் எஸ்கேப்

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US