புதன் பெயர்ச்சியால் வெற்றி பெறப்போகும் ராசிகள்
சூரிய மண்டலத்தில் மிகவும் உச்சம் பெற்ற கிரகம் புதன் ஆகும். இதனால்தான் இன்த கிரகத்தை நாம் கிரகங்களின் இளவரசர் என்கிறோம். இந்த புதன் கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் போதெல்லாம், அதன் விளைவு அனைத்து ராசிகளிலும் தென்படும்.
அந்தவகையில் தற்போது புதன் கிரகம் மே 7 ஆம் திகதி மேஷ ராசியில் பெயர்ச்சி அடையபப் போகிறார். பின்னர் இந்த ராசியில் மே 23 வரை தங்கி இருப்பார். இந்த 16 நாட்கள் மூன்று ராசிக்காரர்களுக்கு ஒரு பொன்னான நேரமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
கடக ராசி
புதனின் ராசி மாற்றத்தின் தாக்கம் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் வீட்டுப் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். கணவருடனான உங்கள் உறவு இனிமையாக இருக்கும். நீங்கள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லலாம். புதனின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை நிலுவையில் இருந்த அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கத் தொடங்கும். வீட்டில் புதிய கார் வாங்கலாம்.
துலாம் ராசி
மே 7 ஆம் திகதி நடக்க உள்ள புதன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க ஆரம்பிக்கலாம். நீங்கள் உங்கள் வேலையை விட்டு உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம், இவ்வாறு செய்வது உங்களுக்கு வெற்றியை தரக்கக்கூடும். முதலீடு செய்வதற்கு நல்ல நேரமாக இருக்கும். இன்த நேரத்தில் துலாம் ராசிக்காரர்கள் எந்த சேமிப்புத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தாலும், சிறந்த வருமானத்தைப் பெறுவார்கள். உங்களுக்கு பல வருமான ஆதாரங்கள் உருவாக்கலாம். இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமை மேம்படும்.
கும்ப ராசி
மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி அடையப் போவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும், பல பெரிய சாதனைகளை செய்யலாம். உங்கள் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஏற்ற பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு நல்ல சம்பள உயர்வுடன் பதவி உயர்வு கிடைக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லலாம். மனம் ஆன்மீகத்தை நோக்கி நகரும்.