அமெரிக்காவில் பூத்த அதிசய மலர்!
அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக, அழிவின் விளிம்பில் உள்ள சடலத்தைப்போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர் (Corpse flower ) பூத்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மழைக்காடுகளில் வளரக்கூடிய இந்த கார்ப்ஸ் மலர் (Corpse flower ) , உலகிலேயே மிகவும் துர்நாற்றம் வீசக்கூடிய மலராக கருதப்படுகிறு. இந்தச் செடி மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் 2வது தளத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.
இத்தாவரம் முழு வளர்ச்சி அடைந்து,மலர்கள் பூக்க 10ஆண்டுகள்வரை ஆகும் என கூறப்படும் நிலையில் இந்த செடி 7ஆண்டுகளிலேயே பூத்துள்ளது.
மொட்டு மலராக ஓன்றரை நாள் தேவைப்படுவதால் அந்த காட்சிகள் டைம்லேப்ஸ் கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்து. அதேசமயம் கடும் துர்நாற்றம் வீசிய போதும் (Corpse flower ) அதிசய மலரை காண பலர் ஆர்வமுடன் வந்தனர்.


