கன்னியா வெந்நீரூற்றிலும் துண்டைபோட்டார் புத்தர் ;பறிபோகுமா தமிழர்களின் புனித இடம்!
திருகோணமலை கன்னியா கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிப்பதுடன், அது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று முழுமையாக சைவர்களின் வழிப்பாட்டுத் தலங்களால் நிறைந்து இருந்தது. வடக்கே கீரிமலை போன்று கிழக்கே இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்யும் இடமாகவும் கன்னியா வெந்நீரூற்று இருந்தது.

தமிழர் பிரதேசங்களில் புதிகாக விகாரைகள் புத்தர் சிலை
அதுமட்டுமல்லாது 180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலும் அங்குள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தங்களில் இதுவும் ஒன்றாகும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம்கவர்ந்த சுற்றுலா தலங்களில் கன்னியா வெந்நீரூற்று ஒன்றாகும்.
யுத்தம் முடிந்த பின் படிப்படியாக தமிழர் பகுதிகளில் பெளத்த மயப்படுத்தும் நோக்குடன் தொல்பொருள் எனும் பித்தலாட்டத்தின் மூலம் வரலாறுகளை புதிதாக உருவாக்கி தமிழர் காலாகாலமாக இருந்த இடங்களை வழிப்பாட்டுத்தலங்களை கொள்ளையடித்தது.
அதில் திருகோணமலை தழிழர்கள் இழந்த அரிய சொத்து கன்னியா வெந்நீர் ஊற்று. அங்கிருந்த சிவன் கோவிலும் பூட்டப்பட்டது. பிள்ளையார் கோவில் கட்ட வாசலுக்கு ஒரு சிறிய இடம் மட்டுமே வழங்கப்பட்டது அதுவும் செய்ய தடைகள் வந்தது.

அதேசமயம் பிதிர்கடன் செய்ய வருபவர்களுக்கு அதற்கு முன் பல அனுமதிகள் எடுக்க வேண்டியிருக்கின்றமை பெரும் வேதனையான விடயம். இலங்காபுரி மன்னன் , சிறந்த சிவபக்தன் இராணவன் வரலாற்றுப் பதாகை உடைக்கப்பட்டு, புது அனுராதபுர வரலாறு எழுதப்பட்டது.
அதோடு விகாரையும் உருவானது. முழு நேரம் ஒலி பெருக்கியில் பண ஓதப்படுகிறது. உப்புவெளி பிரதேச சபையிடம் இருந்த இடம் தொல்பொருள் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டதோடு வருமானமும் அங்கு செல்கிறது.
மொத்தமாக சிதைக்கப்பட்ட தமிழர் வரலாற்று இடத்தை நாம் கண் முன் காண்கிறோம். ஒவ்வொரு திருகோணமலைத் தமிழனும் இதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்கின்றனர்.

தொல்பொருள்த் திணைக்களம் மூலம் எல்லாளன் கால கோவில்களைத் தேடுவார்களா? அல்லது ராஜராஜ சோளன் கால கோவிலைகளைத் தேடுவார்களா? இவர்களது நோக்கம் ஒரு பொழுதும் தொல்பொருளைத் தேடுவதல்ல மாறாக தமிழர் பகுதிகளை சூறையாடுவதோடு பௌத்த மயப்படுத்தலுமே என சமூக ஆர்வர்கள் ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.
எனவே தமிழர் பிரதேசங்களில் புதிகாக விகாரைகள் புத்தர் சிலை தொடர்பில் பிற பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை போல் ஆகி விடாதீர்கள் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்