தமிழர் பகுதியொன்றில் நடத்தப்பட்ட கொடூரம் ; வசமாக பிடிபட்ட இருவர்
வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி ஒருவரைக் காயப்படுத்தி மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கொள்ளையிட்ட சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை, இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி மோட்டார் சைக்கிள் கொள்ளையிடப்பட்டது.

மேலதிக விசாரணை
இந்த விடயம் தொடர்பாக சிலாபம் பிரதேச குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் ஈடுபட்டனர்.
குறித்த விசாரணைகளின் அடிப்படையில், இந்த குற்றத்திற்குத் திட்டமிட்டு உதவிய சந்தேகநபர்கள் இருவர் நேற்று மாலை கிரிமெட்டியான சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, 22 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கோனவில மற்றும் கலிகமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சிலாபம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.