கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்!
கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த இரு இலங்கை சகோதர்கள் விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 15ம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து தெரியவருவது,
கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில், அவரை பார்ப்பதற்காக கடந்த 14ம் திகதி மாலை திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இதன்போது கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உயிரிழந்த இன்னொருவொருவரின் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.