தங்கையை திருமணம் செய்த அண்ணன்: DNA பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ரெட்டிட் என்ற சமூகவலைதளத்தில் நபரொருவர் நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதில் தான் 6 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மனைவி உண்மையில் தன்னுடைய தங்கை என்ற உண்மை தற்போதே தனக்கு தெரியவந்துள்ளதாகக் அவர் அதில் கூறியுள்ளார்.
இதனால் அவர் குழப்பமான மனநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இருவருக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவ்வாறான நிலையில், அவரின் மனைவிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதன் காரணத்தினால் சிறுநீரக தானத்திற்கு எதிர்பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அதற்காக அவரின் மனைவியின் உறவினர்களுடன் சோதனை செய்து பார்த்தலில் யாருடனும் பொருத்தம் கிடைக்கவில்லை. இறுதியில் கணவரிடம் செய்த சோதனையில் பொருத்தம் மிக அதிகமாகவே இருந்துள்ளது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி மேலும் சில சோதனைகள் நடத்தியதில், அவருக்கும் மனைவிக்கும் DNA பொருத்தம் கண்டறியப்பட்டுள்ளது.
இப்படிதான் அவரின் மனைவி உண்மையில் அவருக்குத் தங்கை என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இந்த நபர், பிறந்தபோதே தத்துப்பிள்ளையாகக் கொடுக்கப்பட்டவர். அதனால் அவருக்கு எப்படி தங்கை, மனைவியாக வந்தார் என்பது குறித்து ஒன்றும் புரியவில்லை என்று கூறியுள்ளார்.
இவரின் உருக்கமான பதிவிற்கு நெட்சன்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
6 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்கு சிறுநீரகத்தை தானம் செய்து குடும்பமாக ஒன்றாக வாழ்வதே நல்லது என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.