உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் காரணம்? பிரிட்டிஷ் பிரஜை விடுத்த கோரிக்கை
நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜை, இந்த சம்பவத்துக்கு யார் உண்மையில் காரணம் என்பதை தான் அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தனக்கும் தனது குடும்பத்துக்கும்; ஒருபோதும் விடைகள் கிடைக்காது என தெரிவித்துள்ள டேவிட் லின்சே, சங்கிரி லா ஹோட்டல் குண்டுவெடிப்பில் டேனியல் மற்றும் அமெலி லின்சி சகோதரர்கள் பலியாகியிருந்தனர்.
முழுமையான விசாரணைகள் வேண்டும்
இந்நிலையில் உயிரிழந்த தனது சகோதரங்களின் பெயரால் இலங்கை மக்களிற்கு ஏதாவது செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எனவே 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான் உண்மையை அறிய விரும்புகின்றேன் அவ்வளவுதான் நான் அரசியல்வாதியோ நீதிபதியோ இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்த அதுவரை எதிர்வுகூறல்கள் சாத்தியமில்லை எனவும் டேவிட் லின்சே, தெரிவித்துள்ளார்.