முடிவை மாற்றிய பிரித்தானியா; மகிழ்ச்சியில் ஈழத்தமிழ் குடும்பம்!
இலங்கை தமிழ் விஞ்ஞானியும் சி;த்;திரவதையிலிருந்து தப்பியவருமான நடராஜா முகுந்தனிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரிட்டன் புகலிடம் வழங்கியுள்ளது.
பிரிட்டனின் உள்துறை அலுவலகத்தின் நடைமுறை பிழைகளால் காரணமாக முகுந்தனும் குடும்பத்தினரும் நாடு கடத்தப்படும் ஆபத்தினை எதிர்நோக்கியிருந்த நிலையிலேயே பிரிட்டன் அவருக்கு புகலிடம் வழங்கியுள்ளது.
முகுந்தன் 2018 இல் இல் பிரிட்டன் சென்றிருந்தார், அவரது மனைவி சர்மிலா care worker ஆக பணியாற்றினார் அவரது பிள்ளைகள் பிரிட்டனில் கல்விகற்றுவந்தனர். இந்நிலையில் கடந்த 2019 இல் அவர் சுகவீனமுற்றிருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்தவேளை சித்திரவதைக்கு உள்ளாகியிருந்தார்.
அதன் பின்னர் முகுந்தன் சென்ற நிலையில் தொடர்ந்து கடந்த வருடம் அவர்களின் தொழில் அனுமதி முடிவிற்கு வந்தது. செப்டம்பர் 2021 இல் பிரிஸ்டலில் இருந்து லண்டன் ஹோட்டலிற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவர்களுடைய புகலிடக்கோரிக்கை பரிசீலனையின் கீழ் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
எனினும் ஒக்டோபர் 11 ம் திகதி மின்னஞச்சலில் அவர்களின் புகலிடக்கோரிக்கை ஆகஸ்ட் 23 ம்திகதியே நிராகரிக்கப்பட்டுவிட்டதாக உள்துறை அலுவலகம் தெரிவித்திருந்தது. அதாவது அவர்களது விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுவதற்கு 28 நாட்களிற்கு முன்னரே அது நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதே அதன் அர்த்தம் ஆகும்.
இந்த நிலையில் உள்துறை அலுவலகத்தின் இந்த தவறுகள் குறித்து கடும் விமர்சனங்கள் வெளியாகியிருந்த நிலையில், முகுந்தன் தனது சட்டத்தரணி மூலம் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனையடுத்து உள்துறை அமைச்சு தனது முடிவை மாற்றியுள்ளதுடன் முகுந்தன் குடும்பத்தினருக்கு அகதி அந்தஸ்த்தினை வழங்கியுள்ளது.
உள்துறை அமைச்சின் இந்த முடிவு தொடர்பில் முகுந்தன் கூறுகையில், உள்துறைஅமைச்சு என்னுடைய எனது குடும்பத்தினரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார் என முகுந்தன் தெரிவித்துள்ளார். மேலும் தனது ஆராய்ச்சியை அச்சமின்றி தொடரமுடியும் எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.