நாடு கடத்த இருந்த தமிழருக்கு விசா வழங்கிய பிரிட்டன் அரசு...எதற்காக தெரியுமா?
விசா முடிந்த நிலையில் நாடு கடத்த இருந்த தமிழருக்கு பிரித்தானியாவின் ஹோம் ஆபிஸ் விசா வழங்கியுள்ளது. இதற்கு காரணமாக அவரது கண்டுபிடிப்புகள் கூறப்படுகின்றன. இவர் தான் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உருவாகும் மெல்லிய நார் இழைகளை கண்டுபிடித்தவர்.
இதனிடையே மலிவு விலையில் சூரிய ஆற்றலை பெறுவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் முன்னணி விஞ்ஞானியான இலங்கை தமிழர் மற்றும் அவரது குடும்பத்தை நாடு கடத்தும் திட்டத்தை பிரிட்டன் அரசு கைவிட்டது. பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் நடைமுறை பிழைகளால் காரணமாக முகுந்தனும் குடும்பத்தினரும் நாடு கடத்தப்படும் ஆபத்தினை எதிர்நோக்கியிருந்த நிலையிலேயே அவருக்கு புகலிடம் வழங்கியுள்ளது.
2018ஆம் ஆண்டில் முகுந்தன் பிரித்தானியா சென்றிருந்தார். அவரின் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத தனது தாயாரைப் பார்க்க இலங்கை சென்ற போது சித்திரவதைக்கு உள்ளானார். முகுந்தன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது தொழில் அனுமதி கடந்த ஆண்டு காலாவதியானது.
செப்டம்பர் 2021 இல் அவரை பிரிஸ்டலில் இருந்து லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவர்களின் புகலிடம் பரிசீலிக்கப்படுவதாகக் கூறினர். ஆனால், அவர்களுக்கு அடைக்கலம் மறுக்கப்பட்டதாக உள்துறை அலுவலகம் அக்டோபர் 11ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது.
உள்துறை அலுவலக முறைகேடு புகார்களை அடுத்து முகுந்தன் தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார். உள்துறை அமைச்சகத்தின் முடிவை வரவேற்ற முகுந்தன், உள்துறை அமைச்சகம் எனது குடும்பத்தின் உயிரைக் காப்பாற்றியது என்றார்.