நீண்ட நேரமாகியும் வராத மணமகன்: கவலையடைந்த மணபெண் வீட்டார்! பரபரப்பு சம்பவம்
இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் திருமண நாள் அன்று பயங்கரமாக மது குடித்துவிட்டு போதியில் சுயநினைவை இழந்து மணமகன் தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுல்தான்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த 13ம் திகதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெண் வீட்டார் திருமணத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வைத்து மணமகன் வருகைக்காக காத்திருந்தனர்.
இருப்பினும், நேரம் தான் சென்றதே தவிர மணமகன் வரவே இல்லை. இதனால் மணபெண் வீட்டார் கவலை அடைந்தனர். என்னவென்று விசாரித்த போதுதான் அதிர்ச்சியான தகவல் தெரியவந்தது.
மணமகன் தனது திருமண நாள் அன்று பயங்கரமாக மது குடித்துவிட்டு போதையில் சுயநினைவை இழந்து தூங்கியுள்ளார். அடுத்த நாள் போதை தெளிந்து மணப்பெண் வீட்டாரை பார்க்க மணமகன் வந்துள்ளார்.
இத்தகைய குடிகார நபரை தன்னால் திருமணம் செய்துகொண்டு வாழ முடியாது என மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
மேலும், திருமண ஏற்பாட்டிற்கு செய்த செலவு தொகையை திருப்பி தருமாறு பெண் வீட்டார் மணமகனிடம் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக இரு தரப்புக்கும் தகராறு ஏற்படவே, மணமகன் வீட்டார் பெண் வீட்டாரை சிறை பிடித்துள்ளனர்.
இதற்குள்ளாக தகவல் பொலிஸாரின் கவனத்திற்கு செல்வே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேசி பிரச்சனையை முடித்து வைத்துள்ளனர்.
போதையில் மணமகன் தனது திருமணத்திற்கே வராமல் விட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.