கி்ளிநொச்சி பொலிசாருக்கு இலஞ்சம்; 5 பேர் கைது
கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் உரிமங்களைப் பரிசோதித்த போது, புவியியல் மதிப்பீடு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் வழக்கப்பட்ட மணல் போக்குவரத்து உரிமத்தில் உத்தியோகத்தர்கள் கையொப்பமிடுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடைய வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்