வெள்ளை மாளிகையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை ரனித்தா ஞானராஜா !(Photos)
உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா வெள்ளை மாளிகையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
உலகில் துணிச்சலான பெண்களாக 2023 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு வௌ்ளை மாளிகையில் நடைபெற்றது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு நடத்தப்படுவதுடன், 2021 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டவர்களும் இம்முறை கௌரவிக்கப்பட்டனர்.
அமெரிக்க தூதுவர் ஜுலி சங் வாழ்த்து
இதன்போது, 2021 ஆம் ஆண்டு உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ரனித்தா ஞானராஜா இலங்கையின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருகின்ற சட்டத்தரணியாவார். இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Congrats to Ranitha Gnanarajah who recently received her award for being a 2021 winner of the @StateDept International Women of Courage award for her efforts to pursue justice for victims of conflict and promote the rights of Sri Lankans from a variety of backgrounds. pic.twitter.com/0GTMCWHh8U
— Ambassador Julie Chung (@USAmbSL) March 9, 2023
அதேவேளை உலகை உலுக்கிய கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு இந்நிகழ்வு நடத்தப்படவில்லை.