மட்டக்களப்பில் படிக்க சென்ற சிறுவனிடம் சில்மிசம் செய்தபிக்கு ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த பிக்குவை இன்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிறமாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கிருந்து படித்து வந்துள்ளார்.
இந் நிலையில் நீண்டகாலமாக பிரதம பிக்கு, துஸ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான இன்று சிறுவன் பொலிசாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பிக்குவை கைது செய்ததுடன் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கைது செய்த பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள கூறிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.