ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் இலங்கை பொலிஸாரை தலை குனிய வைத்த இளைஞன்!
ஒரே ஒரு கேள்வியால் இலங்கை பொஸாரை இளைஞர் ஒருவர் தலைகுனிய வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
நேற்றி இரவு நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் தாக்குதலுக்கு மத்தியில் இருந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு பேசுபொருளாகியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டவர் இளைஞர், நாட்டின் இந்த நிலைமைக்கு இன்று ஊடகங்களும், மதகட்சிகளுமே பொறுப்பு கூற வேண்டும் என்றும், அதனை கூறுவதற்கு எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை ஏனெனில் எங்களுக்கு, கட்சி, பேதம் நிறம் என ஒன்றும் இல்லை.
அந்த பேதங்கள் குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் அனைவரும் இலங்கை மக்கள் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் இங்கு இந்த இடத்தில் உள்ளனர். நீங்கள் நாட்டை காப்பாற்ற வந்ததாக உறுதியெடுத்திருந்தீர்கள் என்றால் அதனை முதலில் செய்யுங்கள்.
முதலில் பொறுப்புகளை எடுங்கள். பொறுப்புகளை எடுக்காமையின் பிரதிபலனே 225 பேர் உருவாகியுள்ளதாக தெரிவித்த அந்த இளைஞர், பொலிஸ் அதிகாரிகளும் எங்கள் பணத்திலேயே சம்பளம் பெறுகின்றீர்கள். எங்களுக்கு பொலிஸார் மீது தனிப்பட்ட கோபங்கள் எதுவும் இல்லை. ஒரு நாடு எழுந்து நின்றால் என்ன நடக்கும் என்பதனை காட்ட வேண்டும்.
நான் வீட்டில் இருந்தேன். இங்கு நடக்கும் வியடத்தை பார்த்து விட்டு ஓடிவந்தேன். மக்களை தாக்காதீர்கள். கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளாதீர்கள். நாங்கள் அமைதி போராட்டம் ஒன்றையே நடத்தி வந்தோம். எம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்தமையினாலேயே நாங்கள் கோபமடைந்தோம்.
இன்றைய அரசாங்கம் தங்கள் பிள்ளைகளை அரசாக்குவதற்கு 21 மில்லியன் மக்களை பிச்சை எடுக்க வைத்தார்கள். எங்களுக்கு குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. எங்களின் நிலைமைக்கு ஒரு தீர்வு மாத்திரமே வேண்டும் என தெரிவித்த அவ் இளைஞர், பொலிஸார் எங்களுடன் ஆதரவாக இருங்கள் அதனையே நாங்கள் கேட்கின்றோம்.
அபிவிருத்தி என்ற பேரில் நாட்டை நாசமாக்கிட்டார்கள். மக்கள் ஒற்றுமையாக இருக்கவில்லை. அதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் ஒன்றுப்பட்டுள்ளோம். எங்கள் ஆர்ப்பாட்டத்தில் இடமளியுங்கள் எனவும் அந்த இளைஞன் பொலிஸாரை பார்த்து கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
அதேசமயம் இளைஞன் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்காமல் பொலிஸார் அனைவரும் அமைதியாக தலை குனிந்தபடி இருந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.