நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி
தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹதராவ குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
குறித்த குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு, உடனடியாக மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மொணராகலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆவார்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் நீராடச் சென்றபோதே இச்சோக விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தொம்பகஹவெல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.