சித்தப்பாவால் பறிபோன சிறுவனின் உயிர்!
தாயின் சட்டரீதியற்ற கணவரால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அச் சிறுவன் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் பஹல்கம பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டுக்குச் சென்று பொலிஸ் அதிகாரிகள் அச் சிறுவனை மீட்டு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் சிறுவனின் தாயின் சட்டரீதியற்ற கணவரை சந்தேகத்தின் பேரில் கம்பஹா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.