கொழும்பு நீச்சல் தடாகத்தில் காயமடைந்த சிறுவன் மரணம்
கொழும்பு நீச்சல் தடாகத்தில் படுகாயமடைந்த எட்டு வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாஸ்டர் ஆர்லான் என்ற அந்த சிறுவன், கொழும்பு கிளப்பில் நடைபெற்ற ஒரு தனியார் பிறந்தநாள் விழாவின் போது நீச்சல் தடாகத்தில் விழுந்து காயமடைந்தார்.
பொலிஸ் முழு விசாரணை
மூளையில் பலத்த காயங்களுக்கு ஆளானதால், பல நாட்களாக அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.
சம்பவம் நடந்தபோது, குளத்தில் உயிர்காக்கும் எந்த காவலரும் இல்லை என்று கூறி, கிளப் மற்றும் அதன் ஊழியர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக அவரது தந்தை பிரசாத் பனகோட பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் முழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கொழும்பு நீச்சல் கிளப் அதன் உறுப்பினர்களுக்கு அளித்த அறிக்கையில், ஒரு உயிர்காக்கும் காவலாளி குழந்தையை மீட்டதாகவும், விருந்தினர்களில் ஒருவரான மருத்துவரின் உதவியுடன் அவசர உதவியை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.