பெற்றோரின் கவனக்குறைவால் சிறுவன் பரிதாப மரணம்
வில்கமுவ - பெரகனத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் நேற்று (27) உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாமினிகம, பெரகனத்த பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை தயார் செய்து மாலை 06.00 மணிக்கு மின்சாரம் வழங்கி மறுநாள் காலை 06.00 மணிக்கு மின்சாரத்தை துண்டிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் மின்சாரத்தை துண்டிக்க மறந்துள்ள நிலையில் சிறுவன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் இருந்து விளாங்காய்களை பறிக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.