குடிநீர் விநியோக குழாய்க்காக வெட்டப்பட்ட குழியில் சிறுவனின் சடலம்! யாழில் சம்பவம்
யாழில் காணாமல் போன 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ்.சங்கானை பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஸ்டிபன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்படுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்றைய தினம் அயல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியானது.
பின்னர் காணாமல்போன சிறுவனை தேடிவந்த பெற்றோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
பெற்றோர் மற்றும் பொலிஸார் காணாமல்போன சிறுவனை தேடிவந்த நிலையில் நேற்றைய தினம் இரவே குடீநீர் விநியோக குழாய் அமைக்க வெட்டப்பட்டிருந்த குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை யாழ்.மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.