சிபெட்கோ அறிவிப்பால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பவுசர்கள்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதனால் நீண்ட வரிசையில் பவுசர்கள் எரிபொருள் கொள்வனவுக்காக காத்திருக்கின்றன.
நாட்டில் டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் ஆகும்.
ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் எரிபொருள் நிரப்பு நிலையங் களுக்கு முன்னால் வாகனங்கள் நீண்ட வரிசை யில் நிற்கின்ற நிலையில், டெக் கூட்டுத்தாப னத்தின் எரிபொருள் கிடங்குகளுக்கு முன்பாக வெற்று பவுசர் லொறிகள் அணிவகுத்து நிற்கின்றன.
இலங்கைக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் சில காலமாக கடலில் நங்கூர மிடப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான பணத்தைச் செலுத்த டொலர்கள் இன்னும் கிடைக்க வில்லை.
நாட்டின் தற்போதைய தேவையில் 50% மட்டுமே தற்போதைய நிலவரப்படி கூட்டுத்தாபனம் வழங்க முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ள நிலையில் , நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.