33,000 லீற்றர் டீசலுடன் குடைசாய்ந்த பௌசர்!
டீசலை ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று , கினிகத்ஹேன நகரில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சபுகஸ்கந்தயிலிருந்து கொட்டகலை உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய சாலைக்கு டீசலை ஏற்றிச் சென்ற பௌசரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளாகியுள்ள பௌசரில் 33,000 லீற்றர் டீசல் காணப்படுவதாகவும், தற்போது பௌசரிலிருந்து டீசல் கசிவு ஏற்பட்டுள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த பௌசரின் சாரதி, நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளாகியுள்ள பௌசரில் உள்ள டீசல் எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு, பௌசரையும் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
