வீட்டின் மேல் சரிந்து விழுந்த மண்மேடு ; உடமைகள் சேதம்
திம்புலபத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடொன்று சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக குறித்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

படுக்கையறை சேதம்
மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாக சேதம் அடைந்துள்ளது.

மேலும் வீட்டின் மற்ற சுவர்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதால், வீட்டில் வசிக்கும் 05 பேரை உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்கவைக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மண்சரிவினால் உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் உடமைகள் சேதமடைந்துள்ளன. சம்பவம் குறித்து திம்புலபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.