18 மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட எல்லை; கண்ணீருடன் விமானநிலையத்தில் இணைந்த உறவுகள்
அவுஸ்திரேலியா 18 மாதங்களின் பின்னர் இன்று தனது சர்வதேச எல்லையை திறந்ததை தொடர்ந்து விமானநிலையங்களில் உணர்ச்சிகரமான மீளிணைவுகள் இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து சிங்கப்பூர் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் விமானங்களில் பயணிகள் சிட்னி விமானநிலையத்திற்கு வந்துசேர்ந்தனர். இந்நிலையில் பல மாதங்களாக காணாமல் இருந்த தங்கள் உறவுகளை கண்டவர்கள் அவர்களை கண்ணீருடன் வரவேற்றனர்.
அதோடு பயணிகளை விமானநிலைய விமான சேவை பணியாளர்களும் வரவேற்றதுடன் அவர்களிற்கு அன்பளிப்புகளையும் வழங்கினர். மெல்பேர்னில் சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியதும் மகிழ்ச்சியில் அதன் மீது நீர்பாய்ச்சப்பட்டது.
இந்நிலையில் பல மாதங்களின் பின்னர் சந்தித்த உறவுகளின் உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான புகைப்படங்கள் சமூக வைஅத்தளங்களில் பரவி வருகின்றது.



