சென்னையில் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழா!
சென்னை எழும்பூரில் தலைமைக் கழகம் தாயகத்தில் தமிழீழத் தேசிய தலைவர் மாவீரர் வே.பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு புத்தக வெளியீட்டு விழா ஒன்று இடம்பெற்றுள்ளதாக மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வு இன்று (26) திராவிட ரத்னா தமிழனக் காவலர் தலைவர் திரு. வைகோ எம்.பி (Vaiko) அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இந்நிகழ்வில் விசிக தலைவர் திரு தொல்.திருமாவளவன் எம்.பி (Thol. Thirumavalavan) தவக தலைவர் திரு வேல்முருகன் எம்.எல்.ஏ பேராசியர் திருமதி சரசுவதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மே 17 இயக்கத்தின் தலைவர் தோழர் திரு. திருமுருகன் காந்தி அவர்கள் ஒருங்கிணைத்த நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் ஈழ சகோதரி ந.மாலதி எழுத்தாக்கத்தில் தமிழ் பெண் பொதுவெளி புத்தக வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.