பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தமையால் உயிரிழந்துள்ளார்.
தமிழில் 1991ஆம் ஆண்டு வெளியான நடிகர் பாக்கிராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் போண்டா மணி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்துள்ள இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (23.12.2023) இரவு 10 மணியளவில் தனது வீட்டில் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையின் போது ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.