நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகை: யார் அவர்?
பிரம்மாண்ட இயக்குனராக வலம் சங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் ஆரம்பமானது.
மேலும் இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ராம் சரண் 15 படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடிவரை ஆகும் என ஷங்கர் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்.
இதேவேளை இயங்குனர் ஷங்கரிடம் தயாரிப்பாளர் ராஜூ பேச்சுவார்த்தை மேற்கொண்டு 170 கோடி பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை கியாரா அத்வானி நடிக்க வைக்க சங்கர் முடிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக நடிகை கியாரா அத்வானி பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கியாரா அத்வானி பெறும் இந்த சம்பளம் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவை விட அதிகம் என தெரிகிறது.
தமிழ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிருப்பவர் நயன்தாரா.
இதேவேளை நடிகை கியாரா அத்வானிக்கு தமிழில் இதுதான் முதல் படமாகும்.
இதேவேளை பிரம்மாண்ட இயக்குனர் படம் என்றாலே பட்ஜெட்டும் பிரம்மாணடமாகவே இருக்கும், இந்நிலையில் இந்த சம்பளம் எல்லாம் ஒன்றும் பெரிய செலவே இல்லை என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்து வருவதாலும் அவரின் மார்க்கெட்டை பெரியளவில் கொண்டு செல்லக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.