மட்டக்களப்பு பகுதியில் வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்தில் உள்ள வாய்களிலிருந்து இன்று மாலை ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
மேலுமச்சடலமாக மீட்கப்பட்டது 8 பிள்ளைகளின் தந்தையான அமர சிங்கம்(47) என்பது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதாக வெல்லாவெளி போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை வயலுக்கு சென்ற அமரசிங்கம் வீடு திரும்பாத நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி 38ம் கிராமம் வைரவர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வயல் வடிகால் பகுதியில் துவிச்சக்கரவண்டியும் சடலமமும் கிடப்பதாக அந்த வலையாக சென்ற வழிப்போக்கர்களால் மக்களுக்கு தெரியவந்தது.
அதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த சடலம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.